மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்
அறிமுகம்
- பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று
- இப்புத்தகம் நூல் வடிவுயின்றி பருவ நிலையில் அமைந்திருக்கும்
- புலவர்கள், விரும்பிய தெய்வங்கள், சமய சாரியர்கள், அரசர், உபகாரிகள் ஆகியோரைக் குழந்தையாக உருவாக்கி கற்பனைப் பல அமைத்து பாடபடுவதே ஆகும்.
- இரண்டு பால்களைக் கொண்டுள்ளது. அவை ஆண்பால் பிள்ளைத்தமிழ் மற்றும் பெண்பால்பிள்ளைதமிழ்.
- இதில் மாதம் 1 முதல் 21 வரை ஒரு குழந்தையின் வளர்சியைப் பற்றி கூறுவர்.
- ஒவ்வொரு பருவமும் 10 பாடல்களைக் கொண்டுள்ளது.
- இப்பிள்ளைதமிழ் குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது.
- இப்பாடல்கள் 17-ஆம் கால நூற்றாண்டில் பாடப்பட்டவை.
- பொருள்நலம், கலைவளம் ஆகியவற்றால் சிறந்து வழங்கும் இந்நூலில் விநயகர் வணக்கம் முதலில் இடம் பெற்றுள்ளது.
- காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகக் கடவுள், முருகக்கடவுள், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சத்தமாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமர குருபரர் வேண்டுகிறார்.
- இந்நூலில் மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.
நூலாசிரியரின் அறிமுகம்
- இந்நூலை இயற்றியவரின் பெயர் குமர குருபரர் ஆகும்.
- இவர் சிவத்தொண்டில் சிறந்து விளங்கியவர்; இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர்.
- இவர் ஐந்தாண்டு வரை பேசவில்லை, இவரின் பெற்றோர்கள் திருசெந்தூர் முருகனை வேண்டி இவர் பேசத் தொடங்கினார்.
- பேச்சுப் பெற்றதின் காணிக்கையாக முதற்கண் கந்தர் கலிவெண்பாஎன்னும் பாமாலை இயற்றினார்
- முருகன் இவர் கனவில் வந்து காட்சி தந்து நீ குருபரனாகுக! என்றருளிச் சென்றார். அது முதல் இவர் குமர குருபரர் என அழைக்கப் பட்டார்.
- இவர் 'சிற்றிலக்கிய வேந்து' எனப் போற்றப்படுகிறார்
- பாண்டி நாட்டிலுள்ள திரு வைகுண்டம் என்ற ஊரில் தோன்றி வாழ்ந்தவர். இவரின் பெற்றோர் சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையும் ஆவர்.
- அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.
- பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப்பயணமானார்.
- அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.
- குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment