Thursday, January 18, 2018

பருவம் 1: காப்புப்பருவம்


பாடல் 1: திருமால்


பொருள்:

கடவுளே விஷ்ணு, செந்தாமரையில் வீட்ற்றிருக்கும் இலக்குமியை அனைத்துக்கொள்.

கடவுளே, நீர் நடக்கும் திசை எல்லாம் நீர் அணிந்திருக்கும் துளசி மாலையிளிருந்து தேன் வடிகிறது. இத்தேன் பூமியின் மண்ணில் கலந்து ஊடுருவி ஒரு நல்ல மணத்தைப் பரவச் செய்கிறது.

விஷ்ணுவே, நீர் மேகம் போன்ற அழகன வண்ணம் படைத்தவன். நீங்கள் ஆயிரம் தலைசிறந்த ஆதிஷேசனை மடித்து தொள்களில் சுமந்து செல்கிறீர்கள்.

நீங்கள் வலியுடன் இருந்தாலும், தமிழ் கவிஞன் கனிகண்ணனின் பின் தொடர்தீர். ஏனெனில், அவர் தமிழ் பாலை நேசிதவர் என்பதனால். இதனால், பண்டைய வேதங்கள் உங்களைப் பின் தொடர்ந்தன.

தாயே மீனாட்சியம்மை,
நீ எங்களின் தாயாவீர், பெண்களின் மத்தியில் இராணியாவீர்,
நீங்கள் சிவனுடன் ஒரு பிரகாசமான சிம்மாசனத்தில் இருத்தல் வேண்டும்,
எட்டு திசைகளிலும் யானைகளைக் கொண்டிருக்க வேண்டும்,
பிரகசமான மனிதர்களையும் முப்பத்துரண்டு சிங்களைக் கொண்டுருக்க வேண்டும், மற்றும் அருபத்து நாங்கு கேனங்கள் அனைவரும் ஆதிசேஷரால் நடத்தப்படுவர்.
ஆதிசேஷர் என்பவர் அவரது தலையில் வைரங்களைப் பிரகாசமாகக் கொண்டிருப்பார்.

விஷ்ணு பெருமான் மீனாட்சியம்மனைக் காப்பாற்றுவாராக!


பாடல் 2: சிவபெருமான்

                                     


பொருள்

கடவுள் சிவபெருமான் உயர் சிகரங்களின் வடக்கு திசையான மலைக்குச் சென்றார். அந்த மலைகளை அவர் தனது கை பலத்தினைக் கொண்டு வீழ்த்தினார். கடவுள் சிவபெருமான் தனது பலதினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் எதிரிகளையும் எதிர்த்துப் போராடினார்.

நாற்றங்கொண்ட சொற்போர் புரியத்திருஞான சம்பந்தர் ஆகிய இளைஞரின் திருபாசுரத்தை வைகை ஆற்றுப் பெருக்கில் நீரை எதிர்த்துச் செல்லும்படி செய்தார்.

சிவபெருமான் அவரது பக்தர்களை 'ஹர ஹர' என பாடும்படி கட்டளையிட்டார். தொடர்ந்தார் போல் பாடும் பக்தர்கள் சொர்கதிற்கு அனுப்பப் பட்டனர். அங்கு இருக்கும் கற்ப்பகமரம் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கக் கூடிய வல்லமைப் பெற்றது. சிறந்த தமிழ் புழமைப் பெற்ற சிவபெருமான் எனது எளிய கோர்வையை ஏற்றுக்கொண்டார்.

காதணிகளைக் கொண்டு அலங்கரிக்கப் பட்ட செவியைப் பயன்படுத்தி அசுவரதன் மற்றும் கம்பலனின் இசைகளைக் கேட்டு மகிழ்ந்தார். அவரது அடர்ந்த ஜடாவ்ம், பவளமாக சிவப்பு மற்றும் பச்சை அருகம் புல் கொண்டு மாலை அணிந்திருந்தார், வெள்ளை பிறை நிலவுடன் ஜொலிக்கிறார். சிவபெருமான் தரமான பாட்ல்களை இயற்றினார். தாமரை மலரினில் வீற்றிருக்கும் பிரமாவிற்கு வேதம் எழுத உதவினார்.

மதுரையில் புகழ் பெற்ற வெள்ளி மண்டபத்தில் சிவபெருமான் நடனம் ஆடியுள்ளார். அவரது பாதங்களை வணங்குவோம். அவர் மீனாட்சியை புகழ்கின்றார். அவரது முடி எண்ணெய் கொண்டது. அவரது முத்து போன்ற புன்னகை நிலவின் கதிர்கள் போல் ஜொலித்து.


சிவபெருமான் அழகாக பார்க்கும்போது தெய்வத்தின் இளம் சுற்றும், அவரது மனது பலவீனமாக வளர்கிறது. மீனாட்சி சிவபெருமானின் படத்தை மனதில் வரைந்து வைத்துயிருக்கிறாள்.

இலட்சுமி, அழகிய தெய்வம், அவள் சிவப்பு தாமரையில் வீற்றிருப்பாள். கல்விக்கு அரசியான கலைமள், மின்னல் போன்று பிறகாசிக்கும் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். தாமரை மலரினில் குடிக்கொண்டிருக்கும் தெய்னவங்களையும் வணங்குகிறோம். 

அவள் இனிமையான வார்தைகளைக் கொண்டு பேசுகிறாள், அன்னம் போன்று பிறகாசிக்கவும் செய்கிறாள் மற்றும் அவள் ஒரு பெண்மை கொண்ட கரி போல் மெதுவாக நடக்கிறாள். அலங்கார தேவி, பாண்டிய மன்னனின் விலைமதிப்பற்ற மகள். அவரது மலைப் போன்ற தோள்களில் உலகத்தை வெய்த்திருக்கின்றார். 

மதுரை நகரினில் பழமையுற்ற தேனின் இனிமைப் போன்ற தமிழை வளர்ப்போம். 

சிவப்பெருமான் மீனாட்சியம்மையை காப்பாராக.



பாடல் 3: சித்திவிநாயக்கடவுள்


பொருள்:

கணேசா உமக்கு நீண்ட தண்டு உள்ளது, உமது காதுகளில் இருந்து வெளிவரும் நீர் கடலின் அலைகள் போன்றது. 

விநாயக பெருமான் அனைத்து பக்த்தர்களின் மனதிலும் வீற்றீருக்கின்றார். நாம் அனைவரும் அவரைப் புகழ்ந்து பாடுவோம்.

மதுரையின் ராணி தாயே மீனாட்சியம்மையே! நீங்கள் புதிய தேனா? நீங்கள் ஒரு வளர்ந்து வரும் தங்க கொடிகலையா? நீங்கள் பிறவியிலே மூன்று மார்பகங்களைக் கொண்டு மதுரையில் பிறந்தவர்.

எங்களின் மதுரையரசியை கணபதிக் காக்க!


பாடல் 4: முருகக்கடவுள்


பொருள்:

பல கடவுள் ஒன்று கூடி, மெரு மலையை கடையும் கோலாகக்  கொண்டு கடலைக் கடைந்தனர். அக்கடலில் இருந்து பால் வெளிவர தொடங்கியது. கடலின் அலைகள் கரையைச் செரும் பொழுது பலத்த ஓசையுடன் வந்தடைந்தது.

கடவுளே விஷ்னு,
நீங்கள் துளசி மாலைகளைக் கொண்டு அலங்கரிக்கப் பட்டவர். ஆதிஷெசன் மேல் வீற்றீருக்கும் பகவான் ஆவீர். 

கடலில் விஷம் அலைப் பெருக்கி வரும் பொழுது சிவபெருமான் அதனை அருந்தி விட்டார். அவர் அருந்திய விஷம் தொண்டையுடன் நின்றுவிட்டது. இதனால், சிவபெருமானுக்கு நீலகண்டன் என்று பெயர் பெற்றார். அவருக்கு சந்திரனையும் சூரியனையும் பிரகாசமின்றி இயங்கச் செய்யும் சக்தி உடையவர்.

மீனாட்சியம்மையின் கண்கள் நீண்டவை. அவை மீன் போன்ற வடிவம் கொண்டவை. தாயின் கண்கள் அவர்களின் செவிகள் வரை நீண்டு இருக்கும். அம்மை அழகிய காதணிகளை அணிந்திருப்பாள்.

முருகனின் மனைவியான தெய்வானை, இந்திரா மற்றும் ஐராவதத்தில் சவாரி செய்யும் இந்திரனின் மகள். அவள் கற்பக காட்டில் சுற்றி திரிந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்; இலக்குமியை போன்று அழகாக இருப்பாள்; பாற்கடலில் பிறந்தவள்.

முருகப்பெருமான் மலைகளின் அடிதளதிடையே வள்ளியை மணக்க காத்திருந்தார். வள்ளியம்மை மயில் போன்று அழகுடையவள். வள்ளி நாடோடி குடும்பத்தை செர்ந்தவள். 

தமிழ் கடவுள் முருகனே! எங்கள் மீனாட்சியம்மையை காப்பீராக!

Wednesday, January 17, 2018

விநாயகக்கடவுள் வணக்கம்


பொருள்:

நாம் அனைவரும் கணேசக்கடவுளைப் புகழுவோம்,
அவரது கன்னங்களில் இருந்து வெள்ளம் பெருக,
நீண்ட முகம், பெரிய காதுகள், இருண்ட தும்பிக்கை, மற்றும் தீப் போன்ற கண்களைப் பிரகாடசமாகக் கொண்டிறுப்பார்.
அவர் தன்னுடைய இரண்டு காதுகளையும் அசைக்கும் பொழுது ஏற்படும் காற்று பூமியின் சூட்டையும் வெப்பத்தையும் மூழ்கடித்துவிடும்.
இவர் தன்னுடைய வலுவான பாதங்களைக் கொண்டு சொர்வின்றி விளையாடுவார், இதன் மூலம் தங்க பொதிகை மலையின் தூய்யைத் துடத்துடைப்பார்.
இவர் இந்திரனின் யானை ஐராவணம் போன்றவர்.
இந்த வீர வீரனைப் பாராட்டுவோம்.

கடவுள் சிவபெருமான் அழகிய மலைகளுக்கு நடுவில் அமர்ந்து, ஜடையில் பிறை சூடி காட்சியளித்தார்.
சிவபெருமான் பக்தர்களுக்கு கிருபையளிகிரார், நீங்களும் மகிழ்சியடைகிறீர்கள்.
கடவுள் சிவபெருமானின் மார்பகங்கள் கதிரவனின் கதிர்களைப் போல் பிரகாசமாக இருக்கின்றது.

கடவுள் மீனாட்சியம்மன், நீ மலையரசனின் மகள்,
நீ அழகு மிகுந்தவள், உனக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்வர், கோவில்களில் ஆராதனையும் செய்வர்.
தாயே அபிராமவள்ளி நாங்கள் உம்மை போற்றி பாடுகிறோம்.
ஆதலால், இந்த செந்தழில் புத்தகத்தை அனைவரும் போற்றிபாடுவோம். 

Tuesday, January 9, 2018

பருவங்களின் விளக்கம்


பருவங்களின் பிரிவு (பொது)


காப்புப்பருவம்

  • இப்பருவம் இறைவனை வணங்கும்படிச் செய்யும் பருவமாகும். இப்பிள்ளைத்த்மிழின் நோக்கம் இயற்றியவறை மேன்மையடையச் செய்வதாகும்.
  • இப்பருவம் முதன்மையாக அமைவதால் காக்கும் தொழிலைக் கொண்டிருக்கும் திருமாலையே முதன்மை கடவுளாகப் போற்றுகின்றனர்.

செங்கீரைப்பருவம்

  • கீர் என்றால் சொல் என்று பொருட்ப்படும். குழந்தைகள் இப்பருவதில் தான் மழலை மொழியில் பேசத் தொடங்குவர்; ஓசை எழுப்புவர்.
  • இக்கால பருவதில் பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார்கள் குழந்தைகள் சிறந்த சொற்களை மழலையில் பேச வேண்டிக்க்கொள்வர்.
  • குழந்தைகள் இப்பருவதில் கைகளை நிலத்தில் வைத்து முகத்தை வான் நோக்கி காண்பர்.

தாலப்பருவம்

  • தால் என்பதற்கு நாக்கு என்று மறு பொருள் உண்டு. நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தைகளை உறங்க வைப்பதைத் தான் இப்பருவம் உணர்துகிறது.

சப்பாணிப்பருவம்


  • இப்பருவதில் குழங்தைகள் உட்காற்ந்து கைக்கொட்டி விளையாடுவர். சுற்றயத்தார் அனைவரும் குழந்தைகளைக் கைத்தட்டி அழைப்பர்.
  • சப் என்றால் ஒலி, பாணி என்றால் கைகள் என பொருட்படும்.
  • சப்+பாணி = சப்பாணி

முத்தப்பருவம்

  • பருவங்களிலே இஃது சிறந்தப் பருவமாக கருதப்படுகிறது.
  • குழந்தைகளிடமிருந்து முத்தம் பெருவதே இப்பருவம்.

வருகைப்பருவம்

  • இதனை வாரனைப் பருவம் எனும் அழைப்பர்.
  • வரவேற்பு எனபது தமிழர் மரபில் மிகச் சிறந்த ஒன்று.
  • குழந்தைகள் தட்டி தட்டி நடந்து வரும் பொழுது வருக வருக என மன மகிழ்ச்சியுடன் அழைப்பதே இப்பருவம்.
  • இப்பருவதில் வரவேற்பின் சிறப்பை எடுத்துறைப்பர்.

அம்புலிப்பருவம்

  • அம்புலி - சந்திரன்
  • வின்னில் இருக்கும் சந்திரனை விளையாட அழைப்பதே இப்பருவம்.

நோக்கம்

  1. குழந்தையை அம்புலிக்கு சரி நிகராக என்னுதல்.
  2. அம்புலியையும் குழந்தையையும் வேறு படுத்துதல்.
  3. அம்புலியுடன் விளைடயாடுவதால் நன்மைகளைக் கூறுதல்
  4. அம்புலி வர வில்லையெனில் என்ன தண்டனைக் கிடைக்கும் என்று எடுத்துரைத்தல்.



பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன

நீராடற்பருவம்

  • இப்பருவம் குழந்தையை நீராட வேண்டிப் பாடும் பருவமாக அமைகிறது.

அம்மானைப்பருவம்

  • அம்மானை என்பது ஒரு வகையான விளையாட்டாகும். இதனை கழங்கு என்றும் கூறுவர். கழங்கு என்றால் மரம், ஈயம் ஆகிய பொருட்களைக் கொண்டு பந்து வடிவில் உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள். இக்கழுங்கை ஒருவர் பின் ஒருவர் எரிந்து விளையாடுவர்.
  • அம்மானை ஒரு வகையான விளையாட்டைத் தாண்டி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியமாக அமைந்தது. 

ஊசற்பருவம்

  • ஊஞ்சல் ஆடுதலையே ஊசல் என்று கூறுவர்.குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதின் சிறப்பை அனைவருக்கும் எடுத்துரைப்பர்.
  • அதுமட்டும் இன்றி ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையில் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்துகளை எடுத்துரைப்பர்.



    Monday, January 8, 2018

    பிள்ளைத்தமிழ் இலக்கணம்

    பிள்ளைத்தமிழ் முன்னோடி

    • தொல்காபியத்திற்கு பிறகு அதாவது 1200 ஆண்டுகளுக்கு பின் பெரியாழ்வார்கள் திருமாலை குழந்தைப் பருவமாக்கி இப்பாடலைத் தொடங்கினர். 

    பருவங்கள்

    • பிள்ளைத்தமிழில் இடம் பெருகின்ற முதல் 7 காப்புகளில் மாற்றம் அல்ல
    • காப்புபருவம், செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம்.
    • மேற்கொண்ட 7 பருவ நிலையும் ஆண் மற்றும் பெண் பால் பிள்ளைத்தமிழில் உள்ளவை ஆகும்.
    • ஆண் பால் - சிற்றற்பருவம், சிருபறைபருவம், சிருதேர்பருவம் ( பின் தொடரும் 3 பருவ நிலை)
    • பெண் பால்- அம்மானைப்பருவம், நீராட்ற்பருவம், ஊசற்பவருவம் (பின் தொடரும் 3 பருவ நிலை)
    • பெரும்பாலன பிள்ளைத்தமிழில் 10 பருவங்கள் மட்டுமே இருக்கும்.
    • ஆண்டாள் பிள்ளைத்தமிழில் 11 பருவங்கள் உண்டு.
    • தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழில் 12 பருவ நிலை உண்டு.


    பருவங்களின் விளக்கம்

    பிள்ளைத்தமிழ் 3-ஆம் திங்களில் இருந்து தொடங்குகிறது.
    1.  3-ஆம் திங்கள் - காப்புபருவம்
    2. 5-ஆம் திங்கள் - செங்கீரைப்பருவம்
    3. 7-ஆம் திங்கள்-  தாலப்பருவம்
    4. 9-ஆம் திங்கள்- சப்பாணிப்பருவம்
    5. 11-ஆம் திங்கள்- முத்தப்பருவம்
    6. 13-ஆம் திங்கள்- வருகைப்பருவம்
    7. 15-ஆம் திங்கள்- அம்புலிப்பருவம்
    8. 17-ஆம் திங்கள்- அம்மானைப்பருவம்
    9. 19-ஆம் திங்கள்-  நீராட்ற்பருவம்
    10. 21-ஆம் திங்கள்- ஊசற்பவருவம்

    Sunday, January 7, 2018

    மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்


    அறிமுகம்

    • பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று
    • இப்புத்தகம் நூல் வடிவுயின்றி பருவ நிலையில் அமைந்திருக்கும்
    • புலவர்கள், விரும்பிய தெய்வங்கள், சமய சாரியர்கள், அரசர், உபகாரிகள் ஆகியோரைக் குழந்தையாக உருவாக்கி கற்பனைப் பல அமைத்து பாடபடுவதே ஆகும்.
    • இரண்டு பால்களைக் கொண்டுள்ளது. அவை ஆண்பால் பிள்ளைத்தமிழ் மற்றும் பெண்பால்பிள்ளைதமிழ்.
    • இதில் மாதம் 1 முதல் 21 வரை ஒரு குழந்தையின் வளர்சியைப் பற்றி கூறுவர்.
    • ஒவ்வொரு பருவமும் 10 பாடல்களைக் கொண்டுள்ளது.
    • இப்பிள்ளைதமிழ் குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது.
    • இப்பாடல்கள் 17-ஆம் கால நூற்றாண்டில் பாடப்பட்டவை.
    • பொருள்நலம், கலைவளம் ஆகியவற்றால் சிறந்து வழங்கும் இந்நூலில் விநயகர் வணக்கம் முதலில் இடம் பெற்றுள்ளது.
    • காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகக் கடவுள், முருகக்கடவுள், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சத்தமாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமர குருபரர் வேண்டுகிறார்.
    • இந்நூலில் மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.

    நூலாசிரியரின் அறிமுகம்

    • இந்நூலை இயற்றியவரின் பெயர் குமர குருபரர் ஆகும்.
    • இவர் சிவத்தொண்டில் சிறந்து விளங்கியவர்; இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர்.
    • இவர் ஐந்தாண்டு வரை பேசவில்லை, இவரின் பெற்றோர்கள் திருசெந்தூர் முருகனை வேண்டி இவர் பேசத் தொடங்கினார்.
    • பேச்சுப் பெற்றதின் காணிக்கையாக முதற்கண் கந்தர் கலிவெண்பாஎன்னும் பாமாலை இயற்றினார்
    • முருகன் இவர் கனவில் வந்து காட்சி தந்து நீ குருபரனாகுக! என்றருளிச் சென்றார். அது முதல் இவர் குமர குருபரர் என அழைக்கப் பட்டார்.
    •  இவர் 'சிற்றிலக்கிய வேந்து' எனப் போற்றப்படுகிறார்
    • பாண்டி நாட்டிலுள்ள திரு வைகுண்டம் என்ற ஊரில் தோன்றி வாழ்ந்தவர். இவரின் பெற்றோர் சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையும் ஆவர்.


    • அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.
    • பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப்பயணமானார்.
    • அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.
    • குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.